விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்: 5533/அ4/2024
நாள்: 18.09.2026
பொருள்: பள்ளிக் கல்வி – விழுப்புரம் மாவட்டம் – அனைத்து வகை பள்ளிகளுக்கும் 19.09.2026 சனிக்கிழமை அன்று பள்ளி வேலை நாளாக செயல்பட தெரிவித்தல் – தொடர்பாக.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 2026–27ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்களின்படி 19.09.2026 சனிக்கிழமை அன்று பள்ளி முழு வேலை நாளாகும். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் சனிக்கிழமை அன்று வழக்கம்போல் பள்ளிகளை இயக்க வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
பெறுநர்:
அனைத்து வகை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், விழுப்புரம்.
நகல்:
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (இணையதளம்) விழுப்புரம் / தினத்தினம்.
மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்க நிலை) – விழுப்புரம் / திண்டிவனம்.
மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) – விழுப்புரம்.
உதவி திட்ட அலுவலர், அனைவருக்கும் கல்வி, விழுப்புரம்..




















0 Comments